“என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்” வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை என்கவுண்டரில் காவல்துறையினர் சுட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்ணலூர் பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் பயத்தில் இந்திரா கூச்சலிட்டனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

இந்நிலையில் வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பின் வாங்கியதும் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி காட்டுக்குள் மறைந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

மேலும் அவர்கள் தப்பி ஓடும் போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து  கொள்ளையர்கள் பதுங்கியிருக்கும் இடம் காட்டுப்பகுதி என்பதால் ட்ரோன் கேமரா வைத்து வலைவீசி தேடி வந்துள்ளனர். அதில் ஒருவரை என்கவுண்டரில் காவல்துறையினர் சுட்டு கொன்றனர். மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *