காரைக்குடியில் 25-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் வருகிற 25-ம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, விற்பனை துறை, சேவை துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுனர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் அதே போல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் டெய்லரிங் முடித்த 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்களும், மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம். இதில் தங்களது பயோடேட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தங்களது சுய விவரங்களை வேலை வாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல்  பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் வேலை வாய்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது. அதே போல் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.