‘எமிசாட்’ மற்றும் 28 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்கின்றது…!!

‘எமிசாட்’ மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்து 28 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றது.

இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட’எமிசாட்’ செயற்கைக்கோளான பி.எஸ்.எல்.வி.சி45 மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்கு இந்த செயற்கைக்கோள்  உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவின் 24 செயர்க்கைக்கோள்கள் , சுவிட்சர்லாந்து , ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு செயற்கைக் கோள்கள் மற்றும் லுதுவோனியவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என நான்கு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது .

 

இஸ்ரோ மூலம் முதல் முறையாக ஒரே ராக்கெட்டில் 3 செயற்கைகோள்கள் வெவ்வேறு  புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சரியாக இன்று காலை 9.30 மணி அளவில் 28 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 71_வது ராக்கெட் இதுவாகும். இந்த ஆண்டு ஏவப்படும் 2_ஆவது மற்றும் பி.எஸ்.எல்.வி.க்யூஎல் வகையில் விண்ணில் பாயும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி நிறுவனங்கள் , நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் விண்ணில் செலுத்தப்படவுள்ளத்து.