7 பவுன் தங்க நகை திருட்டு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி போலீசார் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் தங்கியுள்ளார். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் கொரோனா ஊடரங்கு காரணமாக திருப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ராதாகிருஷ்ண அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை ராதாகிருஷ்ணன் அறிந்துள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் திருப்புனவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *