எலான் மஸ்க்கிற்கு இப்படி ஒரு ரசிகரா?…. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆசை… வைரலாகும் புகைப்படம்…!!!

எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள்  மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே  இருக்கிறார்கள்.

இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று பச்சை குத்தி கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல எலான் மஸ்க் வாய்ப்பு கொடுப்பார் என்ற கனவுடன் அவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

இது பற்றி ரோட்ரிகோ என்ற அந்த இளைஞர் கூறுகையில், எனக்காக இருப்பவர் எலான் மஸ்க். அவர் மீது நான் வைத்திருக்கும் அன்பை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. அவர் செய்தது,  செய்யப்போவது எல்லாமே மக்களுக்கானது தான். மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்.

அந்த வகையில் வரலாற்றில் அவரின் பெயர் எப்போதும் நிலைத்து இருக்கும். என்னுடைய மிகப்பெரிய ஊக்கம் அவர் தான். வரும் 2024 ஆம் வருடத்தில் அவருடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பை பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply