ரோட்டில் சுற்றித் திரியும் யானைகள் …கவனம் தேவை!! வனத்துறையினர் வேண்டுகோள் !!

ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில்  யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள்  கவனத்துடன் செல்ல வேண்டும் என்று  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய படம்

ஆசனூர் அருகில்  காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல்  யானையொன்று தனது  குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக  சென்றது.இந்நிலையில் வனத்துறையினர்  , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு  அறிவுரை கூறி  வருகின்றனர்.