கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து 2 யானைகள் பாதைத் தெரியாமல் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன .
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு செல்ல வேண்டாமெனவும் தண்டோரோ மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .