விளைநிலங்களில் “யானைகள்”அட்டகாசம் … ஓசூரில் பரபரப்பு ..!!

ஓசூர் அருகே காட்டுயானைகள் நடமாடிக் கொண்டு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்கும்படி வனத்துறையினர்  எச்சரிக்கை செய்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் நீர்தேக்க பகுதியில் இரண்டு காட்டு யானைகளின் நடமாட்டமானது காணப்படுகிறது . இந்நிலையில் திடீரென சித்தனப்பள்ளியில்  உள்ள விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 

Image result for elephant village attack images

தற்போது கெலவரப்பள்ளி அணைக்கு அருகே உள்ள நீர்நிலை பகுதியில் காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. காட்டு யானைகள் எந்த நேரத்திலும் கிராமங்களுக்குள் செல்லலாம் என்பதால் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  பொதுமக்கள், கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டோர் கவனத்துடன் இருக்கும்படி வனத்துறையினர் கூறியதையடுத்து காட்டு யானைகளை மாலையில் காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.