“காட்டிலிருந்து வெளியேறிய யானைகள்” குளித்து கும்மாளம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் ஏரியில் குளித்து கும்மாளம் அடித்து உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே  வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேறிய யானைகள் அப்பகுதியில் சுற்றி திரிகின்றன. மேலும் விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் சேஷயன் ஏரியில் குளித்து கும்மாளம் அடித்துள்ளன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்துள்ளனர். மேலும் விவசாய பகுதிக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *