அட்டகாசம் தாங்க முடியல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை… விவசாயிகள் எடுத்த முடிவு…!!

அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த வாழைகளை யானைகள் மிதித்து நாசப்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியிலுள்ள விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அப்பகுதியிலுள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று உணவு தேடுவது வழக்கம். அப்போது அங்குள்ள பயிர்கள் யானைகளால் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  அம்மாபாளையம் என்ற கிராமத்தில் வசித்து வரும் சரவணகுமார் என்பவர் தனது தோட்டத்தில் சுமார் 1800 வாழைகளை சாகுபடி செய்துள்ளார். இதனையடுத்து சரவணகுமார் வழக்கம் போல தனது தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வாழைகள் அனைத்தும் நாசப்படுத்தபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் சரவணகுமாரின் தோட்டத்திற்குள் புகுந்து சாகுபடி செய்துள்ள வாழைகளை நாசப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இது போன்று யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வனத்துறை அதிகாரிகளிடம் இது பற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே  சத்தியமங்கலத்திலுள்ள மாவட்ட வன அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என விவசாயிகள் சார்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *