அட்டகாசம் தாங்க முடியல… சோகத்தில் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

யானைகள் நாசம் செய்த பயிர்களுக்கு தகுந்த இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த வன விலங்குகள் அருகிலுள்ள தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வழக்கமாகி வருகின்றன. இந்நிலையில் தாளவாடி பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இதனையடுத்து இவரின் தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழை மற்றும் கரும்பு பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோ அருகிலுள்ள விவசாயிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் தகவலறிந்த விவசாயிகள் அங்கு திரண்டு வந்து வெடி வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை விரட்ட முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து சென்றுள்ளன. மேலும் யானைகள் சாகுபடி நிலையிலிருந்த  பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. எனவே இதற்கு தகுந்த இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *