சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வெகு நேரமாக காட்டு யானை சாலை பகுதியிலேயே உலா வந்துள்ளது.
அதன் பின்னரே வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் தோட்டத்திற்கு செல்லவே அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே அப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.