வனப் பகுதிக்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மகேந்திரமங்கலம் வனப்பகுதியில் ஐந்து யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.
மேலும் வனத்துறையினர் யானைகளை விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதோடு அவை பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவும், ஊருக்குள் புகுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த யானைகள் நடமாட்டமுள்ள கிராமங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.