இந்த வழியா போகும் போது கவனமா போங்க….!! சாலையில் நின்று பிளிரும் யானைகள்…. அச்சத்தில் மக்கள்….!!!

காட்டிலிருந்து வெளியேறிய யானைகள் சாலையில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் பகுதி ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளை நிலத்திற்குள் புகுந்து யானையை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரட்டி அடித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் சைனா குண்டா காவல்துறையின் சோதனை சாவடி அருகே யானைகள் பிளிறியபடி நின்றுகொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். எனவே மோர்தனா கிராமத்திற்கு செல்லும் வனப் பகுதியில் அமைந்துள்ள சாலை வழியாக பொதுமக்கள் போகும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறும், தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *