ஊருக்குள் புகுந்த யானைகள்… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள் பொதுமக்களை விரட்டியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சன்புதூர், வடகரை உள்ளிட்ட கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. எனவே இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை வன விலங்குகள் அடிக்கடி நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வந்த 2 காட்டு யானைகள் திடீரென வடகரையில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்து விட்டது.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் யானையை விரட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது யானைகள் பொதுமக்களை விரட்டியதால் அனைவரும் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒலி எழுப்பியும், பட்டாசு வெடித்தும் அந்த 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதனையடுத்து  காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாதவாறு தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *