“நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள்” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த வனத்துறை..!!

நடிகர் மோகன் லால் வீட்டில் யானை தந்தங்களை வைத்து கொள்ள கேரள அரசு சட்ட படியே உரிமம் வழங்கியிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

கொச்சியில் உள்ள நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் வருமானவரித்  துறையினர் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் 4 யானைத்தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோகன்லால் மீது சட்ட விரோதமாக யானைத்தந்தங்கள் வைத்ததாக கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

Related image

இந்நிலையில், மோகன் லால் வீட்டில் தந்தங்களை வைத்து கொள்வதற்கு கேரளஅரசு அனுமதி அளித்ததால் அந்த வழக்கு முடித்து கொள்ளப்பட்டது. இதனிடையே அரசின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக கேரள  வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், யானை தந்தங்களை வீட்டில் வைத்திருக்க நடிகர் மோகன் லாலுக்கு அரசு சட்ட படியே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.