“மின்சார ரயில் மோதி சிறுவன் பலி “சோகத்தில் சக பயணிகள்!!..

நடைமேடையில் இருந்து தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சகபயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார் இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உண்டு கோடை விடுமுறையையொட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை வந்தார் பின்னர் மீண்டும் மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது மகன் ஆதித்யா உடன் காத்திருந்தார் அப்பொழுது  நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த ஆதித்யா திடீரென நடைமேடையில் இருந்து தவறி விழுந்தார் அப்பொழுது சென்னை கடற்கரை பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் மோதி தனது பெற்றோர் முன் ஆதித்யா பரிதாபமாக உயிரிழந்தார் இச்சம்பவம் சகபயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகன் இறந்ததைக் கண்டு கதறி அழுத பெற்றோர் மகனின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் மாம்பலம் பகுதி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .