மின் கோபுரத்தின் மீது ஏறி…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்வாரிய ஊழியர் மின் கோபுரத்தின் மீது ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள உள்ளகரம் கருணாநிதி நகரில் கோதண்டராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோதண்டராமன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கோதண்டராமன் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கோதண்டராமன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் அப்பகுதியில் இருக்கும் 33 அடி உயரமுள்ள மின்சார கோபுரத்தின் மீது ஏறியுள்ளார். அதன்பிறகு கோதண்டராமன் அங்கிருந்த கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கோதண்டராமனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *