3 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும்…… திமுக தேர்தல் ஆணையத்திடம் மனு…!!

ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளிலும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . மேலும் இந்த தேர்தலோடு சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் , ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

18 தொகுதியில் சட்ட மன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியவுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர் . மேலும் நேற்று முன்தினம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்ர்தல் வைக்க முடிவெடுப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்பி  திருச்சி சிவா , டி.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர் . அதில்  திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ,மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கும் சேர்த்து சாட்டாமன்ற இடைத்தேர்தல்  தேர்தல் நடத்த வேண்டி மனு அளித்துள்ளனர்.