21 சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்துக…. திமுக கூட்டத்தில் தீர்மானம்…!!

காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம்  கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள்  ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு  இருக்கிறது .

குறிப்பாக வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான இடைத்தேர்தலை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மீதம் இருக்கக்கூடிய 3 தொகுதிகளில் தேர்தல் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை .  அதாவது அரவக்குறிச்சி , ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளை காரணங்களால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது .

இந்நிலையில் திமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் அரவக்குறிச்சி , ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளும் மக்களவைத் தேர்தளோடு சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . மேலும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் நேரடியாக தேர்தல் ஆணையரை அணுகி 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்த உள்ளதாகவும் , அதன் பின் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உடனடியாக தேர்தலை நடத்தும் நோக்கில் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகின்றது.