#ElectionBreaking: அதிமுக பேனரில் 3ஆவது முறையாக பெயர் மாற்றம்: ஈரோடு தேர்தலில் புதிய திருப்பம்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இன்று காலை அதிமுக அறிவித்தது முதல் தற்போது வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. வேட்பாளரை அறிவித்த கையோடு தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி வேட்பாளர் பெயரை வேட்பாளர் பெயர் உள்ளடக்கிய பேனரை அதிமுக வைத்திருந்தது.

பாஜகவை கழட்டிவிட்டதைபோன்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இல்லாமல் இருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த நிலையில் அதிமுக எடப்பாடி அணியின் அணிக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கப்படும் என்று அண்ணாமலை பதிலடி தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அதிமுக பேனர் மாற்றம் செய்யப்பட்டு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் முற்போக்கு என்ற  வார்த்தைக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது., இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்று  இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் தேசிய ஜனநாயகம் முற்போக்கு கூட்டணி, பின்பு தேசிய ஜனநாயக கூட்டணி, தற்போது கூட்டணி கட்சியின் வேட்பாளர் என 3ஆவது பெயரை அதிமுக வைத்துள்ளது.