வரக்கூடிய 13-ஆம் தேதி முதல் 2 கம்பெனி CAF என்று சொல்லக்கூடிய (central armed police forces) மத்திய ஆயுதங்களுடன் கூடிய பாதுகாப்பு படையினர் வர உள்ளார்கள். ஒரு கம்பெனி என்று சொன்னால் 40 பேருக்கு மேல் இருப்பார்கள். இரண்டு கம்பெனி என்று சொன்னால் 80க்கும் மேற்பட்ட வீரர்கள் வருவார்கள். அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை மார்ச் மாதம் 2ஆம் தேதி வரை இங்கேதான் தங்கி இருப்பார்கள். ஏதாவது அசம்பாவிதம் சம்பவம் நடைபெற்றால் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு கொடுப்பார்கள்.
வாக்கு எண்னிக்கை நடைபெறக் கூடிய பகுதிகளில் பிரச்சனை வந்தால் அவர்கள் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். யாராவது வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது வேற ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றாலோ உடனடியாக அப்புறப்படுத்துவார்கள். அவர்களுக்கென்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஏற்கனவே வெளி மாநிலத்திலிருந்து நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய மேற்பார்வையில் இவர்கள் செயல்படுவார்கள் என்று தெரிகிறது.