#Election Breaking: இடைத்தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை: அண்ணாமலை

செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது.

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் ஓட்டு கேட்பதை திமுக விரைவாக தொடங்கியுள்ளது  பயத்தின் வெளிப்பாடுதான். களத்தில் முதலில் நிற்பதாலேயே வெற்றி கிடைத்துவிடும் என திமுகவினர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் திமுக தோல்வி அடைந்து விட்டதால் இடைத்தேர்தலை கண்டு பயப்படுகிறார்கள். திமுகவுக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம்; இது பரீட்சை அல்ல என தெரிவித்தார்.