திமுக தலைமையகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு …… !!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது 

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்  திமுக 20 , காங்கிரஸ் 10 , சிபிஎம் 2 , சிபிஐ 2 , விசிக 2 , மதிமுக 1 , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றது . எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுகின்றார் என்ற வேட்பாளர் பட்டியலை இடதுசாரிகள் , மதிமுக  மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்து விட்டனர். இன்று திமுக_வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் வெளியிடுகின்றார்.

இந்நிலையில் திமுக_வின் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது . திமுக_வின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2019 – மக்களவை தேர்தலை  தலைமைக் கழக தேர்தல் பணிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள்  பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக_வின் மூத்த வழக்கறிஞ்சர் இளங்கோ தலைமையில் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் கிரிராஜன் , துறைமுகம் காஜா , பூச்சி முருகன் , அசன் முகம்மது ஜின்னா , நீலகண்டன் , சரவணன் , வி .அருண் , முத்துக்குமார் , ராஜ்குமார் , வேலுசாமி மற்றும் தாமோதரன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார்.