தேர்தல் பயிற்சி முகாம் தீவிரம்..!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு சரி செய்வது, ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Image result for தேர்தல் பயிற்சி

பொதுவாக தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது போன்றவை காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது. மேலும் மண்டல அலுவலர்கள் அனைவரும் ஒவ்வொரு பூத்களிலும் அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதை தேரிடையாக ஆய்வு செய்து அதனடிப்படையில் அனைத்தும் சரி செய்யப்பட உள்ளது. அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது. தேர்தல் முதன்மை அலுவலர்  சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற  பயிற்சி முகாமில் தேர்தல் பணியாளர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டனர்.