தேர்தல் நேரங்களில் அதிக அளவிலான பணப்புழக்கத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக 371 பேர் தமிழகத்தில் கைது தமிழக தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆனது தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி அதோடு மட்டும் அல்லாமல் பறக்கும் படை ஒன்றையும் நிறுவி சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது…

பொதுவாக தேர்தல் என்றாலே அதிகம் பண பட்டுவாடா என்பது நிகழும் என்று அச்சம் என்பது அனைவரிடத்திலும் இருக்கிறது தேர்தல் ஆணையம் இம்முறை அதிக அளவிலான பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் தேர்தல் நேரங்களில் வாக்கிற்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகளை நிறுவி உள்ளது

இந்த பறக்கும் படைகள் 702 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர் இது குறித்து தேர்தல் ஆணையர் சென்னை தலைமை செயலகத்தில் இவ்வாறு கூறினார் வாகனங்களில் செல்லும் தனிநபர் 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம் என்றும் அதற்கு தடை இல்லை என்றும் அவர் கூறினார் மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதனைத் தொடர்ந்து சுமார் 22 கண்காணிப்பு குழுக்கள் பறக்கும் படைகள் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளார்கள் என்றும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 371 பேர் கைது செய்துள்ளதாகவும் தமிழக தேர்தல் ஆணையர் அவர்கள் கூறியுள்ளார்