“இத வச்சிட்டு எனக்கு ஓட்டு போடுங்க” கவரிங் நாணயம் கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்கள்…. காஞ்சியில் பரபரப்பு….!!!

தங்கம் என்று கூறி பித்தளை நாணயங்கள் அளித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கொழுமணிவாக்கம் பகுதியில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவின் போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி 1-வது வார்டு வேட்பாளராகள் தங்க நாணயங்கள் பரிசாக மக்களுக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் வாக்களித்து விட்டு அந்த நாணயத்தை அடகு வைக்க சென்றுள்ளனர். அப்போது அது பித்தளை நாணயம் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதனையடுத்து வாக்குப் பதிவுக்கு சில நாட்கள் முன்பு கொடுத்தால் அது போலி என தெரிந்துவிடும் என்று எண்ணிய வேட்பாளர்கள் வாக்காளர்கள் ஓட்டுப் போட செல்லும் போது கைகளில் மறைவாக தங்க நாணயம் என கொடுத்து ஏமாற்றி உள்ளனர். இதனால் வேறு ஒருவருக்கு வாக்களிக்கும் மனநிலையில் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட அந்த கட்சி சின்னத்தில் வேட்பாளர்களுக்கு வாக்களித்து விட்டதாகவும், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாது இந்த ஊராட்சியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மற்ற வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *