தேர்தல் தேதியை மாற்றி வைக்க முடியாது…… தேர்தல் ஆணையம் உறுதி…!!

திருவிழாவை காரணம் காட்டி மதுரை தேர்தல் தேதியை மாற்றி வைப்பதில் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞ்சர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தளுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகிள்ளது . மேலும் தேர்தல் நடத்தும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் மும்மரமாக  பணியை செய்து வருகின்றது . இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியிருந்தது , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மற்றும் கள்ளழகர்  திருவிழா வருகின்ற 15ஆம் தேதி முதல் 22_ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இந்நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே மதுரை மக்களவைத் தேர்தலை இன்னொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது .

Image result for தேர்தல் உயர்நீதி மன்ற மதுரை கிளை

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் , சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி , மாவட்ட காவல் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில்தான் தேர்தல் தேதி முடிவெடுக்கப்பட்டுள்ளது  என குறிப்பிட்டார் . ஒரு இடத்தில் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் நாம் தேதியை மாற்ற முடியாது . ஏனென்றால் அதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்று கூறினார் .  அப்போது நீதிபதிகள் ஏன் மதுரை மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் தேதியை இன்னொரு நாளைக்கு ஒத்தி வைக்கலாம் என கேள்வி எழுப்பினர் . அப்போது அதற்கு சாத்தியமில்லை என்று சொன்ன தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார் . இதையடுத்து நீதிபதிகள் கள நிலவரத்தை அறியாமல்  உயர் பதவி இருப்பவர்கள் செயல்படுவதால் தான் இது போன்ற சிக்கல் ஏற்படுகிறது என்று வேதனை தெரிவித்த நீதிபதி இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர் .