மேற்குவங்கத்தில் ஒரு வாக்குசாவடியில் மே 23_ஆம் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23_ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் மேற்கு வங்காள மாநிலத்தின் உத்தர் தொகுதியில் உள்ள 200-ஆவது எண் வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் மே 19-ஆம் தேதி இங்கு நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் மே 23_ஆம் தேதி மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது. இங்கு மே 23_ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மே 23_ஆம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.