தேர்தல் நடத்தும் பொறுப்பை அதிமுக_வுக்கு வழங்கிய தேர்தல் ஆணையம்…முக.ஸ்டாலின் கண்டனம்…!!

தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு இடை தேர்தல் அறிவிக்கவில்லை.

Image result for முக.ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,   தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசிடமே இந்திய தேர்தல் ஆணையம் முழுமையாக ஒப்படைத்து விட்டதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கும் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைதேர்தலை அறிவிக்காதது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அமைந்து விட்டது.மேலும் எதிர்கட்சிகள் மீது மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.