“ஒரு தொகுதியில் 185 வேட்பாளர்கள்” வாக்குசீட்டு முறைக்கு மாறிய தேர்தல் ஆணையம்…!!

தெலுங்கானா_வின் நிசாமாபாத் தொகுதியில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டமாக நடைபெற உள்ளது . தெலுங்கானா மாநிலத்திற்கு முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தெலுங்கானாவில் மஞ்சள் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்காததால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஆயிரம் பேர் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா போட்டியிடும் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் க்கான பட முடிவு

இதில் 78 விவசாயிகள் உட்பட 185 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.அதனால் நிசாமாபாத் தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுமென்று  தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் 63 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் கூடுதலாக நோட்டா மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் வாக்குசீட்டு முறைக்கு  ஏற்பாடு செய்ய உள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிசாமாபாத் தொகுதியில் 185 வேட்பாளர்கள் என்பதால் வாக்குச்சீட்டு புத்தக வடிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.