தமிழகத்தில் இதுவரை 90 கோடி பறிமுதல்!!…. தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை …

தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்ட சோதனையில் 90 கோடி மதிப்பில் பணம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கொண்டாட்டமானது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது மேலும் ஏழு கட்டங்களாக தேர்தல் ஆனது இந்தியாவில் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது .

இதனையடுத்து தேர்தல் நேரங்களில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் பறக்கும் படையை  சோதனையில் ஈடுபட செய்தது  இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பறக்கும் படை தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாத பொருட்கள் நகைகள் போன்றவற்றை கைப்பற்றியுள்ளது பறக்கும்  படையினரின் தீவிர சோதனை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதாப் அவர்கள்  சில தகவல்களை கூறியுள்ளார் அவர் கூறியதாவது,

இதுவரை தமிழகம் முழுவதும் வாகன பரிசோதனை பரிசோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் கைப்பற்றிய தொகை 70 கோடியே 90 லட்சம் மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 88 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 313 கிலோ தங்கம் 380 கிலோ வெள்ளி ஆகிய பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது

மேலும் தேர்தலின்போது தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறிய காரணத்தினால் 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது என்று கூறி 833 புகார்கள் வந்துள்ளன அதில் நன்கு விசாரித்து 37 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் ஆணைய சத்திய பிரதாப் அவர்கள் தெரிவித்துள்ளார்