விதிமுறைகளை மீறிய பா.ஜ.க!!.. டீ கப்பில் தேர்தல் பிரச்சாரம் ….

தேர்தல் விதிமுறைகளை  பா.ஜ.க  மீறியதாக புகார்கள் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் தற்பொழுது விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் குறித்த கொண்டாட்டங்கள் என்பது  பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் மக்களவை தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

தங்களது பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் தேர்தல் பிரச்சார பயணங்களின் மூலமாகவும் மக்களிடையே நேரடியாக சென்று பேசியும் சுவரொட்டிகள் நோட்டீஸ்கள் போன்றவற்றாலும் வழங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர் இதனையடுத்து பிரச்சாரம் குறித்து ஒரு சில விதிமுறைகளை தேர்தல் ஆணையம் ஆனது அரசியல் கட்சிகளுக்கு விதித்திருந்தது இதனை தற்போது பாரதிய ஜனதா கட்சி மீறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதனை விசாரித்து வருகிறது

வடமாநிலங்களில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ கப்புகளில்  நான் ஒரு பாதுகாவலன் என்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார வாசகம் எழுதப்பட்டிருந்தது தேர்தல் விதிமுறையை மீறும் வகையில்  உள்ளதாக புகார்கள்  எழுந்துள்ளது  இதனையடுத்து ரயில்வேயில் சமையல் காண்ட்ராக்ட் எடுத்து இருக்கும் நபருக்கு  அபராதமாக ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் தேர்தல் ஆணையம்  விதித்துள்ளது அதன் பின் அனிதா டீ கப்புகள் விற்பனைக்கின்றி  தடை செய்யப்பட்டது

மேலும் இந்தியாவில் ஒரு சில விமான நிலையங்களிலும் பயணிகள் பயணிக்கும்  போர்டிங் பாசில்  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் பிரிண்ட் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் விமான துறையிடம் தேர்தல் ஆணையம் ஆனது தற்போது விசாரணை நடத்தி வருகிறது மேலும் இது போன்ற செயல்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது  இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.