ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தற்பொழுது புதிய நீதி கட்சியின் தலைவர் சண்முகத்தை சந்தித்துள்ளார். சென்னை டி.என் சிட்டி சாலையில் உள்ள புதிய நீதி கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே புதிய நீதி கட்சி தலைவர் சண்முகத்தை பழனிசாமி தரப்பினரும் சந்தித்து பேசினர். தற்பொழுது பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.