“தேர்தல் 2019 மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல “டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி ..!!

நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன்  கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது .

நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளார் ,

நடந்து முடிந்த தேர்தலில் கிடைத்த வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றி அல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு  கிடைத்த வெற்றி என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் தேர்தலுக்கு வாக்கு இயந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறையே  மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார். இக்கருத்து  தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.