இலங்கைக்கு எதிரான புதிய தொடரில்… இந்திய அணி கேப்டன் இவர்தான்…! வெளியான தகவல் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள புதிய தொடரில் ,இந்திய அணியின் வீரர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில்  சில வீரர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக  வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் வருகின்ற 25 ஆம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்திற்கு செல்வதாக , பிசிசிஐ அறிவித்தது. இந்தப் போட்டியில் இடம் பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை ,சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்த போட்டி முடிந்ததும் ,இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி  வருகின்ற ஆகஸ்ட் மாதம் விளையாட உள்ளது.எனவே  இங்கிலாந்திற்கு  எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி மற்றொரு தொடரை விளையாட இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

எனவே ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி  இலங்கைக்கு சென்று   3 ஒருநாள் கொண்ட போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருப்பதாக , பிசிசிஐயின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த புதிய தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா ,விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோரை  தவிர்த்து, இளம் வீரர்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த புதிய தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி செயல்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள், இந்த புதிய தொடரில் இடம் பெறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *