இலங்கை நட்சத்திர வீரர் பானுகா ராஜபக்ச திடீர் ஓய்வு …. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

இலங்கை கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரர் பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பானுகா ராஜபக்ச சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  பானுகா ராஜபக் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை கிரிக்கெட் சமீபத்தில்அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குறித்த உடற்தகுதி தரத்துடன் பந்தை அதிரடியாக அடிக்க முடியாது என அவர்  நினைப்பதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால் தனது குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவர் ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டியில் விளையாடிய  பானுகா ராஜபக்ச  2 அரை சதங்களுடன் 409  ரன்கள் குவித்துள்ளார்.