‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

Image result for பாராளுமன்ற மக்களவை விவாதம் ரஞ்சன்

இந்நிலையில் இன்று இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகின்றார். இந்நிலையில் இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் மக்களவை தலைவர் ரஞ்சன் சவுத்திரி ,மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவது விதிமுறை மீறல் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஆளும் கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டு  அவரை பேச விடாமல் தடுத்தனர். கூச்சலின் மத்தியில் ஏக் மினிட், ஏக் மினிட் என்று கூற தொடர்ந்து அவரைப் பேசவிடாமல் ஆளும் கட்சி எம்பிக்கள் தடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் அறிவுறுத்தலின்படி ஆளுங்கட்சியினர் அமைதியாக காங்கிரஸ் மக்களவை தலைவர் ரஞ்சன் சவுத்ரி தொடர்ந்து மசோதா குறித்து பேசி வருகிறார்.