எடப்பாடி கிட்ட ஆதாரம் இருக்கா…! கேஸ் போட சொன்ன அமைச்சர்… ADMKவுக்கு நெத்தியடி பதில்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கு வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, நீங்கள் குற்றசாட்டை அவர் சொல்கிறார் என்றால்,  அதற்கு உரிய ஆதாரங்கள் அவரிடத்தில் இருந்தால் அவர் நீதிமன்றமே தாராளமாக அணுகலாம். நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்கலாம்.

நாட்டினுடைய வளர்ச்சியிலே உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால்,  அவர்கள் அதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்று எந்த காலத்திலும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். விமர்சனங்களை எதிர்நோக்குவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அது ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

மென்மேலும் இதை சிறப்பாக செய்யுங்கள் என்று சொல்லும் பொறுப்புள்ள கட்சியாக செய்ய வேண்டுமே தவிர, இது போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளை அவர் ஒருவர் இருக்கிறார், இவர் சொன்னார் என்று எதுவும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதில் உள்நோக்கம் இருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற நல்ல பெயர். இந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 17 மாதமாக இந்த ஆட்சி மாண்புமிகு முதலமைச்சர் உடைய தலைமையிலே இன்றைக்கு பெற்றிருக்கக் கூடிய நல்ல பெயரை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே தான் எந்த ஒரு ஆதாரமும், எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அரசின் மீது சேறைவாரி இரைப்பதன் மூலமாக தங்களை வெளிச்சத்தில் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.  அரசின் மீதான குற்றச்சாட்டில் அவர்களிடம் முறையான ஆதாரங்கள் இருந்தால் தாராளமாக நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தொடுக்கலாம் என தெரிவித்தார்.

Leave a Reply