எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம்.

கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வசதிகளை மேம்படுத்திக் கொடுத்தோம்.

கோவை மாவட்டத்துக்கு பார்த்து பார்த்து செஞ்சோம். சுமார் சிட்டி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம் என  என்னென்ன திட்டங்களை தேவைப்படுகிறதோ,  அவை அனைத்தையும் கொண்டு வந்தோம். இவை எதுவும் நடக்கவில்லை. இனியாவது ஏதாவது ஒரு பதிலை மீடியா முன்பு கூறி நழுவாமல்,  திமுக அரசு.. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காமல் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.