“இடைத்தேர்தலில் பண பலத்தை காட்ட தொடங்கிய திமுக”…. சீமான் ஓபன் டாக்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “அதிகார பலம், பணபலத்தை இந்த தேர்தலில் திமுக காட்ட தொடங்கிவிட்டது என கூறினார். மேலும் நான் எந்த தேர்தலிலும் ஆதரவுக்காக யாரிடமும் போய் நிற்கப்போவது இல்லை. தனியாகத் தான் போட்டியிடுவேன். தேர்தலில் நாம் வெற்றிபெறுவது உறுதி என்று சீமான் கூறினார்.

Leave a Reply