உக்ரைன் போர் எதிரொலி…. அமெரிக்காவில் உயரும் விலையேற்றம்… மக்கள் அவதி…!!!

அமெரிக்க நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு  மக்கள் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் போன்ற காரணங்களால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதன்படி, அமெரிக்க நாட்டில் கடந்த 1981 ஆம் வருடத்திற்கு பின் முதல் தடவையாக உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

மேலும், எரிபொருள் விளையும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது முட்டை விலை 37 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 60 முட்டைகளின் விலை 670 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 920 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.