“தமாகா_வுக்கு ஆட்டோ சின்னம்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….. !!

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமாகா_விற்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , புதிய தமிழகம் , தேமுதிக , புதிய நீதி கட்சி மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்கட்சியின் வேட்பாளராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமாகா ஆட்டோ க்கான பட முடிவு

இந்நிலையில் தஞ்சையில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இந்த சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கீடு செய்ய கோரி அக்கட்சியின் தலைவர் GK.வாசன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லை என்று கூறி சைக்கிள் சின்னத்தை நீதி மன்றம் நிராகரித்தது.இந்நிலையில் தற்போது தமாகா_க்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.