தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் ‌ தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்பு  பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக 10 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின்சார வாரியம் நீடித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பொதுமக்கள் அபராதம் இன்றி டிசம்பர் 10ஆம் தேதி வரை மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.