மறக்காமல் பாலுடன் சேர்த்து சாப்பிடுங்க…!!

பால்  பாஸந்தி   செய்ய  தேவையான   பொருட்கள் :

தேவை :

ஆவின் பால்              –  2    லிட்டர்

முந்திரி                        –  20  கிராம்

குங்குமப்பூ                 –  சிறிதளவு

சீனி                                –  300  கிராம்

சாரப்  பருப்பு              –  20  கிராம் ஊற்றி

பச்சைகற்பூரம்           –  சிறிதளவு

செய்முறை : 

கனத்த  பாத்திரத்தில்   பாலை  அடுப்பில்  வைத்து  காய்ச்சவும்.  பின்பு பால் கொதித்தவுடன்  ஆடை படியவும்  ஒதிக்கி  விடவும்.  இவ்வாறு  ஆடை படிய படிய  ஒதுக்கி விட்டு கொண்டே  இருக்கவும்.  பால்  வற்றிய பின்  சீனியை  போட்டு   சுற்றி   பாத்திரத்தில் ஒட்டிய  பாலாடைகளை   கரண்டியை   எடுத்து  விட்டு  நன்றாக   கடைந்து  ஒரு கொதி கொதித்ததும்  வாசனை சாமான்கள்  கலந்து இறக்கி  வைக்கவும். ஆறியவுடன்  ப்ரிட்சில்  வைத்து  சாப்பிட்டால்  சுவையான பால்  பாஸந்தி ரெடி,