ஈஸியா ஒரு சாம்பார் செய்வது எப்படி !!!

ஈஸி சாம்பார்

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 1  கப்

தக்காளி – 2

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

வெந்தயம் –  1/4  டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கறிவேப்பிலை –  சிறிதளவு

மஞ்சள்தூள்  –  1  சிட்டிகை

பெருங்காயத்தூள் – 1  சிட்டிகை

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு  – தேவையான அளவு

சோறு மற்றும் சாம்பார் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் துவரம்பருப்புடன்,   பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசல், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு வேகவைத்த பருப்பு சேர்த்து  கொதிக்க விட  வேண்டும். பின்னர்  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கினால் ஈஸி சாம்பார் தயார் !!!