ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள்…. விக்னேஷ் சிவன், நயன்தாரா கொண்டாட்டம்…. வைரலாகும் புகைப்படம்…!!

ஈஸ்டர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கிடையில் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றுலா சென்று அங்கு இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட  புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதற்கு ஏராளமான லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வரும். அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையான நேற்று விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CNRGJA6hFLB/?igshid=1f1qme6uoprbg