தமிழகத்தில் திடீரென்று நிலநடுக்கம் பொதுமக்கள் அதிர்ச்சி…

தளவாய்புரம் என்னும் கிராமத்தில் பயங்கரமான நில அதிர்வினால் அக்கிராமத்தின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்த தளவாய்புரம் என்னும் கிராமத்தில் திடீரென்று நில அதிர்வு  ஏற்பட்ட நிலையில் பொது மக்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்கு வெளியே வந்து தெருவில் நின்றனர்

திடீரென்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு இடையில்  மிகப் பெரிய அளவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து நில அதிர்வை மிகவும் துல்லியமாக உணர்ந்த கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறி தெருவிற்கு வந்து நின்றனர்

இதனை அடுத்து நில அதிர்வு குறையும் வரை கிராம மக்கள் அச்சத்தில் பதட்டத்தில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு இருந்தனர் இதனை அடுத்து நில அதிர்வு குறைந்த  பின் கிராமத்தை சுற்றி பார்வையிட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

நில அதிர்வினால் பல்வேறு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு பல்வேறு கோட்டைச் சுவர்கள் தகர்ந்த நிலையில் இருந்தன மேலும்  நில அதிர்வின் போது தரையில் கால் இருந்தது ஒரு மின்சாரம்  தாக்கியது போன்ற ஒரு பயங்கரமான ஒரு அதிர்வினை எங்கள் உடலில் இந்த நில அதிர்வு  ஏற்படுத்தியது என்று மிகுந்த அச்சத்துடன் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர் இதனை அடுத்து அந்த இடமானது சம நிலைக்கு திரும்பிய பின்பு கிராம மக்கள் மீண்டும் தங்களது வீட்டிற்குள் சென்று பழைய வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர்