டெல்லியில் நில நடுக்கம்..!! வட மாநிலங்களிலும் எதிரொலி…!!

தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை  பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

Image result for earthquake in delhi-ncr ..."
இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள அலங்கார விளக்குகளும், மின்விசிறிகளும் படபடவென ஆடின. பாகிஸ்தானிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *