சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 11 உயிரிழப்பு , 122 பேர் காயம் …..!!

சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர்.

சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில்  6.0 ஆக பதிவானது.   பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில்  5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சீனாவில் அடுத்தடுத்து  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி, 122 பேர் காயம்

நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி வீதிகளுக்கு வந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது ஒரு நிமிடம்  நீடித்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இது வரை 11 பேர் பலியானதாகவும் , 122 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து நிலநடுக்க பகுதிகளில் உள்ள இடிபாடுகளை மீட்புப்பணியினர் சரி செய்து வருகின்றனர்.